கோவையில் அக்., 6ம் தேதி வோடபோன் 7வது பதிப்பு மராத்தான் போட்டி ; 16000 பேர் பங்கேற்கின்றனர்

கோவை : கோவையில் வரும் அக்., 6ம் தேதி 7வது பதிப்பு மராத்தான் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்பவர்களுக்கு பதக்கம், டி சர்ட் ஆகியவை பந்தய நாளான அக்டோபர் 6 ல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் வரும் அக்., 6ம் தேதி 7வது பதிப்பு மராத்தான் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்பவர்களுக்கு பதக்கம், டி சர்ட் ஆகியவை பந்தய நாளான அக்டோபர் 6 ல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோயம்புத்துார் கேன்சர் பவுண்டேஷன், கோயம்புத்துார் ரன்னர்ஸ், ஷோ ஸ்பேஸ் ஈவன்ட்ஸ் ஆகியவை இணைந்து நடத்தும், கோயம்புத்துார் மராத்தான், கோவை நலனுக்காக மட்டுமின்றி, கேன்சர் பவுண்டேஷனுக்கு நிதி திரட்டவும் நடத்தப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும், அவர்களுக்கு நல்ல கவனிப்பை அளிக்கவும் ஒரு பதிவு பெற்ற நிறுவனமாக உள்ளது கோயம்புத்துார் கேன்சர் பவுண்டேஷன். 1991ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிறுவனம், 28 ஆண்டுகளை கடந்து சேவையாற்றி வருகிறது. தற்போது இந்த பவுண்டேஷன், அனைவரும் பயன்பெறும் வகையில் திருச்சிரோட்டிற்கு மாறியுள்ளது.



இந்த மாரத்தான் போட்டியின் வாயிலாக, கோயம்புத்துார் கேன்சர் பவுண்டேசன், பொதுமக்களிடையே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, ஆரம்பக் கட்டத்திலேயே புற்றுநோயை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை நோயாளிகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் விளக்கம் அளித்து ஆலோசனைகளை வழங்குகிறது. வலி நிவாரணத்துக்கான சேவையையும், இறக்கும் தருவாயில் இருப்போருக்கு உதவி செய்யவும், வீட்டில் அவர்களை கவனித்துக் கொள்ளவும் உதவுகிறது. புற்றுநோயால் இறப்போரின் குடும்பத்துக்கு ஆறுதலாகவும், குடும்பத்தினருக்கு உதவி செய்யவும் இது சேவையாற்றி வருகிறது.

வோடோபோன் கோயம்புத்துார் மராத்தான் போட்டியை, தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் கோயம்புத்துார் மாவட்ட தடகள சங்கம் ஆகியவை அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த மாரத்தான்போட்டி, 21.1 கி.மீ., ஓட்டம் (பாதி மராத்தான்), 10 கி.மீ ஓட்டம் மற்றும் 5 கி.மீ..,ஓட்டம் / நடை என்ற பிரிவுகளில் நடக்கிறது.



போட்டியில் வெற்றி பெறும் ஆண்/பெண் இருபாலருக்கும் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான ரொக்க பரிசுகள் வழங்கப்படுகின்றன. பாதி மராத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு தலா ரூ.25,000/–, ரூ. 15,000/– மற்றும் ரூ.10,000ம் பரிசாக வழங்கப்படும். 10 கி.மீ.,துாரத்தில் வெற்றி பெறுவோருக்கு ரூ.15,000/–, ரூ.10,000/– மற்றும் 5,000/– வழங்கப்படும்.

மூத்தோர் பிரிவில் பாதி மராத்தான் 21.1 கி.மீ., பிரிவில் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு ரூ.15,000/– ரூ.10,000/– மற்றும் ரூ. 5,000 வழங்கப்படும். 10 கி.மீ., பிரிவில், ரூ.10,000 மற்றும் ரூ.7500/– மற்றும் ரூ.5000/– பரிசாக வழங்கப்படும்.

மராத்தான் போட்டி நடக்கும் வழிகளில் உதவி மையங்கள் உள்ளன. தண்ணீர், மருத்துவம், ஆம்புலன்ஸ், வழிகாட்டு குறியீடுகள், பாதுகாவலர்கள், முடிவு நிலையில் உணவு பொருள் மற்றும் பிற வசதிகள் செய்யப்படவுள்ளன. பங்குதாரர்கள், நேரத்தை அளவீடு செய்ய அதிகாரப்பூர்வமான நேர அளவீட்டையும், தனிப்பட்ட நேர அளவீட்டையும் ஒப்பீடு செய்து கொள்ளலாம்.

Newsletter