சி.டி.சி.ஏ லீக் போட்டி : தேசிய விளையாட்டு பள்ளி சி.ஏ. அபார வெற்றி

கோவை : ஸ்ரீ சக்தி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கோவை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனின் 5வது பிரிவு லீக் போட்டியில், இந்திய விளையாட்டு கிரிக்கெட் கிளப் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தேசிய விளையாட்டு பள்ளி வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த, தேசிய விளையாட்டு பள்ளி சி.ஏ., அணி வீரர் சுரேஷ் பாபு அபாரமாக விளையாடி சதமடித்தார். இதன் மூலம், தேசிய விளையாட்டு பள்ளி சி.ஏ., அணி 256 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இந்திய விளையாட்டு கிரிக்கெட் கிளப் அணி, சத்ய மூர்த்தி மற்றும் ராஜ்குமாரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

இதன் மூலம் தேசிய விளையாட்டு பள்ளி அணி, 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதேபோல், ஸ்ரீ சக்தி ஏ மைதானத்தில் நடைபெற்ற மூன்றாம் பிரிவு போட்டியில், ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி அணி, 78 ரன்கள் வித்தியாசத்தில் கோவை டஸ்கர்ஸ் அணியை தோற்கடித்து, இந்த தொடரை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது.

கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் நடந்த மற்றொரு 5வது பிரிவு லீக் போட்டியில், கலீஸ்வரா கிரிக்கெட் கிளப் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் டெவில் ஸ்ட்ரோக்கர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்றது.

Newsletter