மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டி நிறைவு

கோவை : மேட்டுப்பாளையத்தில் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையே மூன்று நாட்கள் நடைபெற்று வந்த தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டி இன்றுடன் நிறைவு பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சூழல் கோப்பைகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன.

கோவை : மேட்டுப்பாளையத்தில் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையே மூன்று நாட்கள் நடைபெற்று வந்த தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டி இன்றுடன் நிறைவு பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சூழல் கோப்பைகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாரில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையில் தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்று வந்தது. 

17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியருக்காக நடத்தப்பட்ட இந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற தென் மாநிலங்களைச் சேர்ந்த 36க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

நாக்கவுட் முறையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனி போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், அதன் இறுதி போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியும் ஊட்டி லாரண்ஸ் பள்ளியும் தகுதி பெற்று மோதின. விருவிருப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலிடத்தை சச்சிதானந்தா பள்ளியும் ஊட்டி லாரன்ஸ் இரண்டாமிடத்தையும் பெற்றது.

இதேபோல் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி முதலிடத்தையும் ஜவகர்லால் பள்ளி நெய்வேலி இரண்டாமிடத்தையும் பெற்றனர்.



மேலும், 19 வயதுக்குட்பட்ட ஹாக்கி போட்டியில் லாரன்ஸ் பள்ளி ஊட்டி முதலிடத்தையும் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

இதேபோல், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சென்னையைச் சேர்ந்த வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி முதலிடத்தையும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் இடத்தையும் பெற்றனர். 

வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் அர்ஜுன் ஹாலப்பா பள்ளி செயலாளர் கவிதாசன் ஆகியோர் சுழல் கோப்பைகளும் கேடயங்களும் வழங்கி பாராட்டினர். 

Newsletter