சி.டி.சி.ஏ லீக் போட்டி: கோவை லெஜண்ட்ஸ் கிரிக்கெட் அகாடமி வெற்றி

கோவை : பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சி.டி.சி.ஏ 6வது பிரிவு லீக் போட்டியின் தொடக்க ஆட்டத்தில், வி.சபீஷ்வரனின் ஐந்து விக்கெட்டுகள் உதவியுடன் கோவை லெஜண்ட்ஸ் கிரிக்கெட் அகாடமி அணி, வாரியர் லெவன் அணியை 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 2019-20 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் லீக் செப்டம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. லீக்கின் தொடக்க நாளில், நாக் அவுட் போட்டியில் இருந்து தகுதி பெற்ற அணிகளான கோவை லெஜண்ட்ஸ் கிரிக்கெட் அகாடமி மற்றும் வாரியர் லெவன் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய கோவை லெஜண்ட்ஸ் கிரிக்கெட் அகாடமி அணி 236 ரன்களை குவித்தது. பின்னர் இமாலய இலக்கை விரட்டிய வாரியர் லெவன் அணி, ஷபீஷ்வரனின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதேபோல், கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது பிரிவு லீக் போட்டியில், ராஜசேகர் மணி மெமோரியல் கிரிக்கெட் கிளப் ரெயின்போ அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.எம்.எம்.சி.சி அணி அபார வெற்றி பெற்றது.

Newsletter