ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் போட்டி : ஆர்.கே.எஸ் கல்வினிலயம் அபார வெற்றி

கோவை : பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 பள்ளிகளுக்கு இடையிலான போட்டியின் தொடக்க ஆட்டத்தில், டி.கே.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை வீழ்த்தி ஆர்.கே.எஸ் கல்வினிலயம் மேல்நிலைப்பள்ளி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த ஆர்.கே.எஸ், சரவணனின் 47 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் எடுத்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய டி.கே.எஸ் அணி, எதிரணி வீரர் சக்திவேலின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 35 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது.

இதன் மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.கே.எஸ் கல்வினிலயம் மேல்நிலைப்பள்ளி அபார வெற்றி பெற்றது. 6 விக்கெட் வீழ்த்திய சக்திவேல் ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள் :

Newsletter