சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கிடையிலான தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டி தொடக்கம் ; 36 அணிகள் பங்கேற்பு

கோவை : சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையில் தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டி மேட்டுப்பாளையத்தில் இன்று துவங்கியது. இதில் தென் மாநிலங்களை சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றுள்ளன.

கோவை : சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையில் தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டி மேட்டுப்பாளையத்தில் இன்று துவங்கியது. இதில் தென் மாநிலங்களை சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றுள்ளன.

சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையே தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி இன்று மேட்டுப்பாளையம் கல்லாரில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. கல்லார் பள்ளி வளாகத்தில் துவங்கிய இந்த போட்டியினை சிந்தனை கவிஞர் கவிதாசன் தொடங்கி வைத்தார்.



17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியருக்காக நடத்தப்படும் இந்த போட்டியில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற தென் மாநிலங்களை சேர்ந்த 36க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்டுள்ளனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக நாக்அவுட் மற்றும் லீக் போட்டியாக நடைபெறுகின்றன.

இன்று தொடங்கிய முதல் போட்டியில், 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில், ஒசூரை சேர்ந்த மகாரிஷி மந்தீர் பள்ளியும் பெருந்துரையை சேர்ந்த சாகர் பன்னாட்டுப்பள்ளி ஆகிய இரு அணிகள் மோதின. தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியானது, வருகின்ற மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. அன்று இறுதி போட்டி நடத்தபட்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும் சுழல் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.

Newsletter