தேசிய ஜூனியர் தடகள போட்டி ; மீண்டும் தங்கம் வென்றார் சதீஷ்

கோவை : இந்திய தடகள சம்மேளனம் நடத்திய 17வது கூட்டமைப்பு கோப்பை தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் எம் சதீஷ்குமார் தங்கப்பதக்கம் வென்றார்.


கோவை : இந்திய தடகள சம்மேளனம் நடத்திய 17வது கூட்டமைப்பு கோப்பை தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் எம் சதீஷ்குமார் தங்கப்பதக்கம் வென்றார்.

ஏற்கனவே 5000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றுள்ள அவர், தற்போது 10000 மீ தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 31.30 நொடிகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்து தங்கம் வென்றுள்ளார்.



மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த சதீஷ்குமார், மாநகராட்சி பள்ளியில் பயின்றார். பயிற்சியாளர் வைரவநாதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட அவர், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் ஆந்திரா, பீகார், சண்டிகர், டெல்லி, கோவா, குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, இமாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, பஞ்சாப் புதுச்சேரி என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

Newsletter