கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் தேர்வு

கோவை : கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் தேர்தல் செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று கோவை நேரு மைதானத்தில் அமைந்துள்ள கால்பந்து சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை : கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் தேர்தல் செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று கோவை நேரு மைதானத்தில் அமைந்துள்ள கால்பந்து சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதற்கு உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.தங்கராஜு, பி.ஏ., பி.எல் , மாவட்ட நீதிபதி (ஓய்வு) முன்னிலையில் சங்க தேர்தல் நடத்தப்பட்டது. 

இதில் 27 குழுக்கள் வாக்களித்தனர். பின்னர் தேர்தல் முடிவுகளை அதே நாளில் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.தங்கராஜு அவர்கள் அறிவித்தார். 



அதில், கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவராக ரத்தினம் குழும நிறுவனங்களின், தலைவர் முனைவர் மதன் ஏ செந்தில், தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். 

கோயம்புத்தூர் மாவட்ட கால்பந்து சங்கத்தின் துணை தலைவராக எம். தினகரன், கே.ராஜா, கே.ஆர்.வி. ராமசாமி., ஓ. சண்முகசுந்தரம்., செயலாளராக, டி கிருஷ்ண மூர்த்தியும்., உதவி செயலாளராக, என்.பி. அனில்குமார்., பொருளாளராக, டி. சண்முகம் ஆகியோர் வெற்றி பெற்றதாக நீதிபதி அறிவித்தார், 

இவர்களின் பதவி காலம் 2019 முதல் 2023 வரை இருக்கும் என அறிவித்தார். 

Newsletter