அண்ணா பல்கலைக்கழக 11வது மண்டல கூடைப்பந்து போட்டி : கோப்பையை வென்றது பி.எஸ்.ஜி

கேபிஆர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் நடந்த அண்ணா பல்கலைக்கழக 11வது மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியை 53-38 என்ற கணக்கில் வீழ்த்தி பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி கோப்பையை வென்றது.

அண்ணா பல்கலைக்கழக மண்டலம் IX கூடைப்பந்து போட்டியை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடந்தது. நாக் அவுட் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் சுமார் 15 கல்லூரிகள் பங்கேற்றது.

இதில், பி.எஸ்.ஜி டெக், கே.பி.ஆர் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் ஸ்ரீ சக்தி கல்லூரி ஆகியவை போட்டிகளில் அரையிறுதிக்கு நுழைந்தன.

அரையிறுதி போட்டியில் கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியை வீழ்த்திய பி.எஸ்.ஜி கல்லூரி இறுதிப்போட்டியில், ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியுடன் மோதியது.

சிறப்பாக விளையாடிய பி.எஸ்.ஜி கல்லூரி 53-38 என்ற கணக்கில் ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற பி.எஸ்.ஜி கல்லூரி இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவிருக்கும் இடை மண்டல போட்டிகளில் பங்கேற்கும்.

Newsletter