தடகள வீராங்கனை சாந்திக்கு தமிழக அரசு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் பணி


தடகள வீராங்கனை சாந்திக்கு தமிழக அரசு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக அரசுப் பணி வழங்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சியை சேர்ந்தவர் சாந்தி. சர்வதேச அளவில் 11 பதக்கங்கள், தேசிய அளவில் 50 மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். இவர், கடந்த 2006-ம் ஆண்டு கத்தாரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார். ஆனால், அவரது பாலினம் குறித்து சர்ச்சை எழுந்தது.

பின்னர் அவர் தடகளப் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது. இதனால் வறுமையில் வாடிய சாந்தி செங்கல் சூளையில் வேலைபார்த்தார். தற்போது தேசிய விளையாட்டு ஆணையத்தில் ஒப்பந்த பணியாளராக சாந்தி பணியாற்றிவருகிறார்.

இந்தநிலையில் தடகள வீராங்கனை சாந்திக்கு தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக நிரந்தர அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்ப்பில் இந்த பணிக்கான அரசானை சாந்தியிடம் வழங்கப்பட்டுள்ளது.

Newsletter