டிவிசனல் ஹாக்கி போட்டி : கோப்பையை வென்றது நாச்சிமுத்து பாலிடெக்னிக்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் இன்டர் பாலிடெக் தடகள சங்கம் சார்பில் நடைபெற்ற கோயம்புத்தூர் டிவிசனல் இன்டர் பாலிடெக்னிக் பிரிவு போட்டியில் பொள்ளாச்சியைச் சேர்ந்த நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி கோப்பையை வென்றது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் இன்டர் பாலிடெக் தடகள சங்கம் சார்பில் நடைபெற்ற கோயம்புத்தூர் டிவிசனல் இன்டர் பாலிடெக்னிக் பிரிவு போட்டியில் பொள்ளாச்சியைச் சேர்ந்த நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி கோப்பையை வென்றது.

கோயம்புத்தூர் டிவிசனல் இன்டர் பாலிடெக்னிக் பிரிவு போட்டிகள் பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதேபோல, ஹாக்கி, கேரம் மற்றும் செஸ் போட்டிகளும் நடத்தப்பட்டன.

சுமார் 12 அணிகள் பங்கேற்ற ஹாக்கி போட்டியில் பி.எஸ்.ஜி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி, என்.பி.ஏ பாலிடெக்னிக் கல்லூரி, கோத்தகிரி மற்றும் நஞ்சியா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இதில் நஞ்சியா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரிக்கு எதிராக இறுதி போட்டியில் விளையாடிய நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் மற்றும் என்.பி.ஏ கோத்தகிரி இடையே நடத்தப்பட்ட மூன்றாவது இடத்திற்கான போட்டியில், பி.எஸ்.ஜி 2-0 என்ற கோல் கணக்கில் என்.பி.ஏ. வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இதேபோல, பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற கேரம் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக் கல்லூரியை 10-1 மற்றும் 8-6 என்ற செட் கணக்கில் தோற்கடித்ததன் மூலம் சுகுணா பாலிடெக் கல்லூரி கோயம்புத்தூர் மண்டலத்தின் சாம்பியன் பட்டத்தை வென்றது. மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பி.எஸ்.ஜி பாலிடெக் கல்லூரி மற்றும் ஜி.ஆர்.ஜி பாலிடெக் கல்லூரி பெற்றன.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நாச்சிமுத்து பாலிடெக் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.தேவராஜன் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெசிக் கல்லூரி இயற்பியல் இயக்குநர் திரு.சண்முகவேல் ஆகியோர் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர். மேலும், பி.எஸ்.ஜி பாலிடெக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி கிரிராஜ் மற்றும் பி.எஸ்.ஜி துறையின் உடற்கல்வி இயக்குநர் பி.பி. முரளி கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள்  









Newsletter