மேட்டுப்பாளையம் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி ஆண்டு விழாவையொட்டி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

கோவை : மேட்டுப்பாளையத்தில் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் ஆண்டு விழாவினையொட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

கோவை : மேட்டுப்பாளையத்தில் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் ஆண்டு விழாவினையொட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள சச்சிதானந்தா பன்னாட்டு பள்ளியின் ஆண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்பட பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்றது.



இதில் ஆகாஷ், அக்னி, திரிசூல், பிரித்வி, ஆகிய நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த விளையாட்டு போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆகாஷ் அணி வெற்றி பெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா வெற்றிக் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகளும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் கவிஞர் கவிதாசன், நிர்வாக அறங்காவலர் ராமசாமி ஆகியோர் மாணவர்கள் மத்தியில் பல்வேறு அறிவுரைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சூரியபிரகாஷ், ஹரிசங்கர், பள்ளியின் கல்வி ஆலோசகர் கணேஷன், முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், உட்பட பலர் கலந்து கொண்டர்.

Newsletter