டிவிசனல் பேட்மிண்டன் போட்டி : வெற்றி வாகை சூடிய பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி

கோவை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இன்டர் பாலிடெக்னிக் தடகள சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பேட்மிண்டன் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி பெற்றது


கோவை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இன்டர் பாலிடெக்னிக் தடகள சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பேட்மிண்டன் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி பெற்றது



பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற இந்த போட்டியில், முதற்கட்டமாக பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் மற்றும் கூடைப்பந்து ஆகியவை இன்று நடத்தப்பட்டன.

இன்று போட்டியில் முடிவில் பேட்மிண்டன் பிரிவில், சுமார் 12 அணிகள் பங்கேற்றன, இதில் பி.எஸ்.ஜி, நாராயண குரு, ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் மற்றும் நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.



இறுதிப் போட்டியில் ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரிக்கு எதிராக விளையாடி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பி.எஸ்.ஜி.பாலிடெக்னிக் கல்லூரி கோப்பை தட்டிசென்றது.

அதேபோல, பி.எஸ்.ஜி தொழில்நுட்ப உள்விளையாட்டு வளாகத்தில் இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியின், இறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி கல்லூரியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி. மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலா அணிகள் பெற்றன.



போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பி.எஸ்.ஜி பாலிடெக் கல்லூரியின் முதல்வர் பி கிரிராஜ், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினார்.

Newsletter