அண்ணா பல்கலைக்கழக 10வது மண்டல செஸ் போட்டி: ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சாம்பியன்

கோவை : அண்ணா பல்கலைக்கழக 10 வது மண்டல செஸ் போட்டியில், தொடரைத் தொகுத்து வழங்கிய ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணியே வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


கோவை : அண்ணா பல்கலைக்கழக 10 வது மண்டல செஸ் போட்டியில், தொடரைத் தொகுத்து வழங்கிய ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணியே வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.



ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நடத்திய இரண்டு நாள் செஸ் போட்டியில் 13 பெண்கள் அணிகள் உட்பட சுமார் 28 அணிகள் பங்கேற்றன. கிருஷ்ணா ஹாலில் நடைபெற்ற இந்த தொடரில், ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் 18 புள்ளிகளைப் பெற்ற ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி, ஆண்கள் பிரிவில் கோப்பையை வென்றது.



5 ஆட்டங்களில் 1 தோல்வியுடன், ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி போட்டிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பெண்கள் பிரிவில் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஐந்து ஆட்டங்கள் முடிவில் 17 புள்ளிகளுடன் கோப்பையை வென்றது. இரண்டாம் இடத்தை எஸ்.வி.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கைப்பற்றியது.



ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜே. ஜேனட், எம். வினோத் குமார், ஃபிடா ஆர்பிட்டர் ஆகியோர் போட்டிகளை வென்றவர்களுக்கு கோப்பைகளையும் சான்றிதழையும் வழங்கினர்.

Newsletter