பாரதியார் உறுப்பு கல்லூரிகளுக்கிடையிலான ஹாக்கி போட்டி : பி.எஸ்.ஜி கல்லூரி வெற்றி

குமரகுரு கல்லூரி நடைபெற்ற பாரதியார் உறுப்பு கல்லூரிகளுக்கிடையிலான ஹாக்கி போட்டியில் பி.எஸ்.ஜி கல்லூரி அணி வெற்றி பெற்றது.

குமரகுரு கல்லூரி நடைபெற்ற பாரதியார் உறுப்பு கல்லூரிகளுக்கிடையிலான ஹாக்கி போட்டியில் பி.எஸ்.ஜி கல்லூரி அணி வெற்றி பெற்றது.

குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நகரின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 15 அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் மற்றும் லீக் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது

பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, டாக்டர் என்ஜிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உடுமலைப்பேட்டை மற்றும் ஈரோட்டில் இருந்து நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை லீக் கட்ட போட்டிகளில் தகுதி பெற்ற முதல் நான்கு அணிகளாக இருந்தன.

லீக் கட்டத்தில், ஒரு போட்டியில் தோல்வியடையாமல் வெற்றி பெற்ற பி.எஸ்.ஜி கல்லூரி அணி முதலிடத்தை பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டாக்டர் என்ஜிபி கல்லூரி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. மூன்றாம் மற்றும் நான்காவது இடங்களை முறையே வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெற்றன.

பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் டாக்டர்.எஸ்.டி.என்.ராஜேஸ்வரன், குமரகுரு கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி எச்.ஓ.டி, டாக்டர் தயாளன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்




Newsletter