தென்னிந்திய அளவில் பள்ளிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி: கோப்பையை வென்றது ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளி அணி

கோவை : 'ஸ்ரீ சக்தி சூப்பர் டிராபி'க்கான தென்னிந்திய அளவிலான இடைநிலைப் பள்ளி கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலைய பள்ளி அணியை வீழ்த்திய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா அணி கோப்பையை தட்டி சென்றது.

முதலில் பேட்டிங் செய்த ரங்கம்மாள் அணி 20 ஓவர்கள் முடிவில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் எளிய இலக்கை விரட்டிய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 7 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா அணி கோப்பையை வென்றது.

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா அணியின் நிர்மல் குமார் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார், போட்டியின் சிறந்த விக்கெட் கீப்பராக ராகுலும், சிறந்த பந்து வீச்சாளராக பாலசுப்ரமணி தேர்வு செய்யப்பட்டார்.

கோப்பையை வென்ற ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளிக்கு ரூ. ஒரு லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது, இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் அணிக்கு ரூ .50000 வழங்கப்பட்டது. மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ள அணிக்கு முறையே 30000 மற்றும் 20,000 வழங்கப்பட்டது.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள் :

Newsletter