ஹாக்கி தொடர் : கோப்பையை வென்றது சி.ஐ.டி. கல்லூரி அணி

கோவை : பி.எஸ்.ஜி. கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான ஹாக்கி தொடரில் கோவை தொழில்நுட்ப அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : பி.எஸ்.ஜி. கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான ஹாக்கி தொடரில் கோவை தொழில்நுட்ப அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டி தொடரில் 6 அணிகள் கலந்து கொண்டன. நாக் அவுட் முறையில் நடந்த இந்தத் தொடரில், கோவை தொழில்நுட்பம் கல்லூரி அணியும், பார்க் தொழில்நுட்பக் கல்லூரி அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதில், அபாரமாக ஆடிய சி.ஐ.டி அணி, 4-2 என்ற கோல் கணக்கில் எதிரணியின் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. 3-வது இடத்திற்கான போட்டியில் என்.ஜி.பி. கல்லூரி அணியை 5-0 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூர் அணியை தோற்கடித்தது.

இதேபோல, பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஶ்ரீ சக்தி கல்லூரி அணி 3-2 என்ற கணக்கில் பி.எஸ்.ஜி. அணியை தோற்கடித்து, மகுடம் சூடியது. 3-வது இடத்தை சி.ஐ.டி. அணியும், 4-வது இடத்தை கே.பி.ஆர். அணியும் பிடித்தன.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள்








Newsletter