அண்ணா பல்கலை., பேட்மிண்டன் போட்டி : முதல்முறையாக மகாலிங்கம் கல்லூரி அணி சாம்பியன்

கோவை : அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான பேட்மிண்டன் போட்டியில் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

கோவை : அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான பேட்மிண்டன் போட்டியில் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்தத் தொடரில் அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட 19 கல்லூரிகளின் அணிகள் கலந்து கொண்டன. ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்தத் தொடரில் பல்வேறு சுற்றுகளுக்குப் பிறகு, இறுதிப் போட்டிக்கு மகாலிங்கம் பொறியியல் கல்லூரி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி அணிகள் முன்னேறின. அதில், 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி தொழில்நுட்பக் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. எஸ்.வி.எஸ். பொறியியல் கல்லூரி அணி 3-வது இடத்தைப் பிடித்தது. 

Newsletter