சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை குவித்து கோவைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் : உற்சாக வரவேற்பு

கோவை : மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 24 பதக்கங்களை குவித்ததன் மூலம் மாணவர்கள் கோவைக்கு பெருமை சேர்த்துள்ளனர் .

கோவை : மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 24 பதக்கங்களை குவித்ததன் மூலம் மாணவர்கள் கோவைக்கு பெருமை சேர்த்துள்ளனர் .

அன்ரோண்டோ கராத்தே சங்கத்தின் சார்பில் கடந்த 25-ம் தேதி பட்டாயாவில் நடந்த இந்த சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில், இந்தியா, மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், இந்தியாவின் சார்பில் கோவையைச் சேர்ந்த 12 மாணவர்களும் கலந்து கொண்டனர். போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அவர்கள் 18 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலத்தை வென்று அசத்தினர். நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர்கள் விமானம் மூலம் கோவை வந்தனர். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள் :







Newsletter