சி.ஆர்.ஐ. கோப்பை கிரிக்கெட் போட்டி : எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி சாம்பியன்

கோவை : சி.ஆர்.ஐ. கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிராண்ட் டிராவிட் கிரிக்கெட் அகாடமி அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : சி.ஆர்.ஐ. கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிராண்ட் டிராவிட் கிரிக்கெட் அகாடமி அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் நுழைவு தொடராகக் கருதப்படும் சி.ஆர்.ஐ. கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக, அருண் பிரசாத், தமிழன்பன் ஆகியோர் தலா 30 ரன்கள் குவித்தனர். இதைத்தொடர்ந்து, விளையாடிய கிராண்ட் டிராவிட் கிரிக்கெட் அகாடமி அணியால் 214 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம், எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இறுதிப்போட்டியில் விளையாடிய இரு அணிகளும் 2019-20-ம் ஆண்டுக்கான 5-வது டிவிசனுக்கும், டாப் 8 அணிகள் 6-வது டிவிசன் போட்டிகளில் விளையாடவும் தகுதி பெற்றுள்ளன.

Newsletter