பாரதியார் உறுப்பு கல்லூரிகளுக்கிடையிலான செஸ் போட்டி இன்று தொடக்கம்

கோவை : மேட்டுப்பாளையத்தில் பாரதியார் உறுப்பு கல்லூரிகளுக்கிடையே மூன்று நாட்கள் நடைபெறும் செஸ்போட்டி இன்று துவங்கியது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் பாரதியார் உறுப்பு கல்லூரிகளுக்கிடையே மூன்று நாட்கள் நடைபெறும் செஸ்போட்டி இன்று துவங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் பாரதியார பல்கலைக்கழகத்தின் சார்பில் அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. காரமடை ஆர்.வி. கலையரங்கத்தில் துவங்கிய இந்த செஸ் போட்டியில், பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் என மொத்தம் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.



நாக் அவுட் முறையில் நடத்தப்படும் இந்த போட்டியினை சர்வதேச செஸ் நடுவர் பழனியப்பன் மற்றும் ஆர்.வி கல்லூரி முதல்வர் சுகுணா ஆகியோர் துவங்கி வைத்தனர். இன்று முதல் துவங்கி இந்த போட்டியானது 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. குழுவாக நடைபெறும் இந்த போட்டியில் இறுதியாக நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, எதிர்வரும் நவம்பர் மாதம் தென்மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதிபெறுவர் என்பது குறிபிடத்தக்கது.

Newsletter