மாநில அளவில் கராத்தே போட்டி

கோயம்புத்தூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி ஜெயேந்திர சரஸ்வதி மகா வித்யாலயா காலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சி, ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் சாதனை தற்காப்பு கலை அகாடமி இணைந்து நடத்தியது. இதில் சிறப்பு விருந்தினராக  கோயம்புத்தூர் என்.சி.சி 2TN பேட்டரி, ஜூனியர் கமிஷன் அதிகாரி அய்யலுசாமி கலந்து கொண்டார்.



நிகழ்ச்சி, பள்ளி மாணவிகளின் கடவுள் வாழ்த்து பாடல் மூலம் இனிதே துவங்கப்பட்டது. பின்னர், சிறப்பு விருந்தினர், பள்ளி முதல்வர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் சிறப்பு விருந்தினர் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். 





இந்நிகழ்ச்சி, மாநில அளவில் இரண்டு நாட்கள் நடக்கும் கராத்தே போட்டியில், இன்று தமிழ்நாடு முழுவதும் இருந்து 18 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டி 8 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் மற்றும் மாணவர்களின் எடை அடிப்படையிலும் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.





இந்நிகழ்ச்சியில், லயன்ஸ் கிளப் கவர்னர் சசிகுமார், ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் கீதா சுதர்சன், சாதனை தற்காப்பு கலை அகாடமி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter