சி.ஆர்.ஐ. கோப்பை கிரிக்கெட் போட்டி : அரையிறுதியில் எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி

கோவை : சி.ஆர்.ஐ. கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் ஓரிஜின் ரீஜினல் கிரிக்கெட் கிளப் அணியை தோற்கடித்து எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

கோவை : சி.ஆர்.ஐ. கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் ஓரிஜின் ரீஜினல் கிரிக்கெட் கிளப் அணியை தோற்கடித்து எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த காலிறுதிப் போட்டியில், முதலில் பேட் செய்த எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 50 ஓவர்களுக்கு 190 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தமிழன்பன் 34 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ஓரிஜின் ரீஜினல் கிரிக்கெட் கிளப் அணி வீரர்கள் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர், பின்வரிசை வீரர்களின் சொதப்பல் ஆட்டத்தினால், 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 

இதேபோல, மற்றொரு காலிறுதி போட்டிகளில் கோவை தொழில்நுட்பக் கல்வி நிறுவன அணி மற்றும் நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் கிரிக்கெட் அகாடமி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன. 

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள் :











Newsletter