கோத்தகிரியில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் மகுடம் சூடியது ஜூட்ஸ் அணி

நீலகிரி : கோத்தகிரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் ஜூட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

நீலகிரி : கோத்தகிரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் ஜூட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஜூட்ஸ் தனியார் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியை மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் தன்ராஜ் தலைமை வகித்தார். இந்தப் போட்டிகளில் கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், ஜூனியர் அளவில் மாணவிகள் கலந்து கொண்ட இறுதி போட்டியில், கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி அணியும், கோவை குமரம் சுசீலா இண்டர் நேஷனல் ரெசிடன்சி பள்ளியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் ஜூட்ஸ் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது. 



இதேபோன்று, ஜூனியர் மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியில், மதுரை விகாசா பள்ளியும், ஜூட்ஸ் பள்ளியும் மோதின. இதிலும், கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி மாணவர்கள் அணி வெற்றி பெற்றது. சீனியர் பிரிவில் கோத்தகிரி ரிவர்சைடு பள்ளியும், ஜூட்ஸ் பள்ளி அணியும் மோதின. இதில், ஜூட்ஸ் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கோப்பையும், பாராட்டு சான்றும் வழங்கப்பட்டது.

Newsletter