பி மண்டல சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

கோவை : பள்ளிகளுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கோவை : பள்ளிகளுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சித்தாபுதூரில் உள்ள கோவை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியின் சார்பில் கோவை நேரு மைதானத்தில் இந்த தடகளப் போட்டிகள் இன்று தொடங்கியது. இதனை கோவை மாநகராட்சியின் ஜே. ஸ்ரவன்குமார் தொடங்கி வைத்தார். இதில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தடகளப் போட்டிகளானது, யு14, 17 மற்றும் 19 ஆகிய வயது பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது. 100 மீ., 200 மீ. 400 மீ., உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டெறிதல், தடை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.  

Newsletter