குமரகுரு கல்லூரியில் 5 நாட்கள் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

கோவை : குமரகுரு கல்வி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் 5 நாட்கள் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள் அக்கல்லூரியின் வளாகத்தில் நேற்று தொடங்கியது.

கோவை : குமரகுரு கல்வி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் 5 நாட்கள் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள் அக்கல்லூரியின் வளாகத்தில் நேற்று தொடங்கியது.

நேற்று முதல் 5 நாட்கள் நடக்கும் இந்த விளையாட்டு திருவிழாவில் சுமார் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், 41 பொறியியல் கல்லூரிகள், 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தடகளம், பேட்மிண்டன், செஸ், கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, ஆக்கி, கபாடி, கோ-கோ, டென்னிஸ், த்ரோபால், டேபிள் டென்னிஸ், வாலிபால், கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

நேற்று நடைபெற்ற வாலிபால் போட்டியில் கே.ஜி. கலை அறிவியல் கல்லூரி அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் பி.பி.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியையும், சி.எம்.எஸ். கல்லூரி அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியையும் வீழ்த்தின. அதேபோல, கூடைப்பந்து போட்டியில், பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, என்.ஜி.பி. கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன. 

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள் :











Newsletter