தென்மண்டல பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி : 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

கோவை : கோவையில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான தென்மண்டல தடகளப் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கோவை : கோவையில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான தென்மண்டல தடகளப் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பி.எம்.ஜி. மெட்ரிகுலேசன் பள்ளியின் சார்பில் கோவை நேரு மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை இந்த தடகளப் போட்டிகள் தொடங்கியது. இதனை பி.எம்.ஜி. பள்ளியின் டி.இ.ஓ. சுப்புலட்சுமி மற்றும் தாளாளர் ரத்தினசபாபதி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இதில், 51 பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கு ம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தடகளப் போட்டிகளானது, யு14,17 மற்றும் 19 ஆகிய வயது பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது. 100 மீ., 200 மீ. 400 மீ., உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டெறிதல், தடை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டன. 

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள் :













Newsletter