மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் 120 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

கோவை : 120-க்கும் மேற்பட்ட மாநில அளவிலான டென்னிஸ் போட்டி கோவையில் நடைபெற்றது.

கோவை : 120-க்கும் மேற்பட்ட மாநில அளவிலான டென்னிஸ் போட்டி கோவையில் நடைபெற்றது.



லிவோ ஸ்போர்ஸ் சார்பிலான இந்தத் தொடர் கடந்த சனிக்கிழமை முதல் 2 நாட்கள் நடைபெற்றது. இதில், யு10 ரெட் பா மினி கோர்ட், யு8,10,12,14,16,21 ஆகிய வயது பிரிவின் கீழ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடத்தப்பட்டன. நாக் அவுட் முறையிலான இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 120-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், பிரனேஷ், நரேன் மித்ரன், நித்தி, ரக்ஷன் ராம், பார்த்திபன், ஜெஃப்ரி, அர்ஜுன் பிரனோதோஷ், கார்த்திகேயன் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் வெற்றி பெற்றனர். 

Newsletter