தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பள்ளி மேட்டுப்பாளையத்தில் மாணவர்களின் மினி மாராத்தன் போட்டி

கோவை : மேட்டுப்பாளையத்தில் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மினி மாராத்தன் போட்டி நடைபெற்றது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மினி மாராத்தன் போட்டி நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தியும், தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற மினி மாராத்தன் போட்டி நடைபெற்றது. காரமடை ஆசிரியர் காலனியில் இருந்து துவங்கிய இந்த மினி மாராத்தான் போட்டியினை மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் விஜய் கிரி மற்றும் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் தர்மலிங்கம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 



காரமடை ஆசிரியர் காலனி சவிதா மருத்துவமனை இருந்து துவங்கிய இந்த பேரணியானது, சுமார் 5 கிலோ மீட்டர் வரை தொடர்ந்து பெட்டதாபுரத்தில் உள்ள கல்லூரி விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. இந்த மாராத்தான் போட்டியின் போது, தண்ணீரினை சேமிப்பதுடன் அவற்றை சிக்கனமாக பயன்படுத்தி தண்ணீர் தட்டுபாட்டிற்கு தீர்வு காணவும் நீர் நிலைகளை பாதுகாக்கவும் வலியுறுத்தப்பட்டது. மாராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter