இன்டர் மீடியா கிரிக்கெட் தொடர் : மீடியா லெவன் அணி சாம்பியன்

கோவை : இன்டர் மீடியா கிரிக்கெட் தொடரில் டைம்ஸ் ஆப் இந்தியா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மீடியா லெவன் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


கோவை : இன்டர் மீடியா கிரிக்கெட் தொடரில் டைம்ஸ் ஆப் இந்தியா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மீடியா லெவன் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் மீடியா லெவன், தி இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் கிரானிக்கல், தினமலர், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 7 அணிகள் கலந்து கொண்டன. லீக் சுற்றுக்கு முடிவில் தினமலர் அணியை தோற்கடித்து டைம்ஸ் ஆப் இந்தியா அணியும், தி இந்து அணியை வீழ்த்தி மீடியா லெவன் அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற மீடியா லெவன் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய டைம்ஸ் ஆப் இந்தியா எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19 ஓவர்களில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து, விளையாடிய மீடியா லெவன் அணி 15-வது ஓவரில் 113 ரன்களை விளாசி எளிதில் வெற்றி பெற்றது.



இந்தப்போட்டியின் ஆட்டநாயகனாக மீடியா லெவன் அணியைச் சேர்ந்த பாபுவும், தொடர் நாயகனாக டைசனும் தேர்வு செய்யப்பட்டனர். 



வெற்றி பெற்ற அணிகளுக்கு ஶ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர். பேபி ஷகிலா பரிசுகளை வழங்கினார்.

Newsletter