மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் கோவையில் தொடக்கம் : 1,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

கோவை : பல்வேறு பகுதிகளில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் கோவையில் இன்று தொடங்கியது.

கோவை : பல்வேறு பகுதிகளில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் கோவையில் இன்று தொடங்கியது.



கோவை மாவட்ட தடகள கூட்டமைப்பின் சார்பில் 'வி மயில்சாமி நினைவு ஜுனியர் தடகளப் போட்டிகள் கோவை நேரு மைதானத்தில் இன்று தொடங்கியது. இன்று முதல் 2 நாட்கள் நடக்கும் இந்த தடகளப் போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கிளப்புகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில், முதல் 3 இடங்களைப் பிடிக்கும் வீரர், வீராங்கனைகள், சென்னையில் வரும் 30-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடைபெற இருக்கும் தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பை பெற உள்ளனர்.



யு14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்டோர் என வயது அடிப்படையில் நடக்கும் இந்தப் போட்டியை கோவை மாவட்ட தடகள கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் இன்று தொடங்கி வைத்தார்.

முதல்நாளில், டி.விஷ்ணுபிரியன், ஆர். ராஜ ராஜேஸ்வரி, ஐ. பவித்ரா, எஸ். ஆதித்யன், டி. ஜீவகுமார், ஏ.அரவிந்த், சி. அருண்குமார், ஆர். சவுமியா, சி. மீனா, சி.எஸ். சிபிராம், எஸ். நிதிஷ், ஜி. நிவேதிதா, எஸ். சுனில் அஷ்டின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Newsletter