55-வது பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அகில இந்திய கூடைப்பந்து போட்டி : இந்தியன் வங்கி அணி சாம்பியன்

கோவை : 55-வது பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில், இந்தியன் வங்கி அணி சாம்பியன் பட்டம் வென்றது.


கோவை : 55-வது பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில், இந்தியன் வங்கி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் கடந்த 54 ஆண்டுகளாக ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியை கோவையில் தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்வாண்டு 55-வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கடந்த 9-ம் தேதி துவங்கி 13-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டிகள் கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இன்று மாலை நடைபெற்ற மூன்று மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் கேரளா மாநில மின்சாரவாரிய அணியை எதிர்த்து இந்திய விமானப்படை அணி விளையாடியது. இதில், கேரளா மாநில மின்சார வாரிய அணி 76 -73 என்ற புள்ளிகள் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து, நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய ராணுவம் அணியை எதிர்த்து இந்தியன் வங்கி அணி விளையாடியது. இதில், இந்தியன் வங்கி அணி 79 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய இந்திய ராணுவம் அணி 61 புள்ளிகள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், சாம்பியன் பட்டம் வென்ற இந்தியன் வங்கி அணிக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம் மற்றும் பி.எஸ்.ஜி. சுழற்கோப்பையும். இரண்டாமிடம் பெற்ற இந்திய ராணுவம் அணிக்கு ரூ. 50 ஆயிரம் மற்றும் பி.எஸ்.ஜி. சுழற்கோப்பையும், மூன்றாம் இடம் பெற்ற கேரளா மாநில மின்சார வாரிய அணிக்கு ரூ. 25 ஆயிரம் மற்றும் நான்காம் இடம் பெற்ற இந்திய விமானப்படை அணிக்கு ரூ. 15 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசாக ரூ. 10 ஆயிரம், இந்தியன் வங்கி அணியின் வீரர் ஹரிராமுக்கு வழங்கப்பட்டது.

இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவிற்கு பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவரும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனருமான ஜி. செல்வராஜ் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் சுமித் சரண் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள் :















Newsletter