கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வதே எனது இலட்சியம் : தேசியளவில் பதக்கம் வென்ற சிறுவன் ஆகாஷ் பேட்டி

கோவை : கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வதே எனது இலட்சியம் என தேசிய அளவில் பதக்கம் வென்ற சிறுவன் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

கோவை : கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வதே எனது இலட்சியம் என தேசிய அளவில் பதக்கம் வென்ற சிறுவன் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

கோவையில் எஸ்.இ.எஸ். பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருபவர் எஸ். ஆகாஷ். இவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தனதேசகர் என்பவரிடம் செஸ் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வரும் ஆகாஷ், 30-க்கும் மேற்பட்ட போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றதுடன், 1,600 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இன்னும் 900 புள்ளிகளைப் பெற்றால், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்லும் வாய்ப்பை அவர் பெறுவார்.



இந்த நிலையில், அகமதாபாத்தில் நடைபெற்ற 9 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 11 சுற்றுகளில் 9 வெற்றி, 3 டிராவுடன் மொத்தம் 9.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை ஆகாஷ் பெற்றுள்ளார். 

Newsletter