தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி : இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியன் வங்கி

கோவை : தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இந்திய விமானப் படையை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இந்தியன் வங்கி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

கோவை : தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இந்திய விமானப் படையை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இந்தியன் வங்கி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 

பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 55-வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் பி.எஸ்.ஜி. டெக் உள்விளையாட்டரங்கு 

மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி போட்டியில் இந்தியன் விமானப் படை அணியை இந்தியன் வங்கி எதிர்த்து விளையாடியது. சம பலத்துடன் மோதிய இரு அணியின் வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். இதனால், முதல் பாதியின் முடிவில் 39-41 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் வங்கி அணி முன்னிலை பெற்றது. 

இதைத் தொடர்ந்து, 2-வது பாதியிலும் இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை குவித்தனர். இதனால், இறுதியில் 87-77 என்ற புள்ளி கணக்கில் விமானப் படை அணியை இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியன் வங்கி அணியில் அதிகபட்சமாக ஹரி ராம் மற்றும் பாலா தனேஷ்வர் 18 புள்ளிகளையும் குவித்தனர்.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள் : 













Newsletter