பி.எஸ்.ஜி. கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி : இந்திய ராணுவம் மற்றும் இந்தியன் வங்கி அணிகள் அரையிறுதிக்கு தகுதி

கோவை : 55-வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இந்திய ராணுவம் மற்றும் இந்தியன் வங்கி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

கோவை : 55-வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இந்திய ராணுவம் மற்றும் இந்தியன் வங்கி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. 



பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 55-வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் பி.எஸ்.ஜி. டெக் உள்விளையாட்டரங்கு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியன் வங்கி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய ராணுவ அணியை எதிர்கொண்டது. சிறப்பாக ஆடிய இந்தியன் வங்கி அணி 72-62 என்ற புள்ளி கணக்கில் வெற்று பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும், முந்தைய இரு போட்டிகளில் வெற்றி பெற்றதால் இந்திய ராணுவ அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 



இதேபோல, கேரளா மின்வாரிய அணி 100-79 என்ற புள்ளிகள் கணக்கில் ஆர்.சி.எஃப். அணியையும், இந்திய விமானப் படை 76-60 என்ற புள்ளிகள் கணக்கில் வருமான வரித்துறை அணியையும் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறின.



Newsletter