தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி கோவையில் தொடக்கம்

கோவை : பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 55-வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நேற்று தொடங்கியது.

கோவை : பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 55-வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நேற்று தொடங்கியது. 

பி.எஸ்.ஜி. டெக் உள்விளையாட்டரங்கு மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில், அகில இந்திய அளவில் மிகச்சிறந்த 8 ஆண்கள் அணி தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் மூன்று நாட்கள் சுழல் முறையிலும், பின்பு நாக் அவுட் முறையிலும் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அதில், வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் விளையாடுவார்கள்.

முதல் நாளில் லேனாவாலா இந்திய கப்பல் படை அணி 91-81 என்ற புள்ளி கணக்கில் சென்னை இந்தியன் வங்கி அணியை தோற்கடித்தது. அதிகபட்சமாக இந்தியன் வங்கி அணி சார்பில் ஹரி ராம் 24 புள்ளிகளும், முயின் பெக் 22 புள்ளிகளும், தமிழ்செல்வன் 14 புள்ளிகளும் குவித்தனர். கப்பற்படை அணியில் மஹிபால் சிங் 29 புள்ளிகளும், லலித் 26 புள்ளிகளும், குர்விந்தர் 17 புள்ளிகளும் பெற்று அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள் :















Newsletter