55-ம் ஆண்டு பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டி கோவையில் வரும் 9-ம் தேதி தொடக்கம்

கோவை : பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 55-வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கோவை : பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 55-வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இது குறித்து பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவரும், பி.எஸ்.ஜி. கேர் இயக்குநருமான டாக்டர். ருத்ரமூர்த்தி மற்றும் பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப்பின் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் கூறியதாவது :- இந்திய அளவில் புகழ்பெற்ற இந்தப் போட்டியில் பங்கு பெற்று விளையாட எல்லா அணிகளும் ஆர்வமாக இருப்பார்கள். அகில இந்திய அளவில் மிகச்சிறந்த 8 ஆண்கள் அணி தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, முதல் மூன்று நாட்கள் சுழல் முறையிலும், பின்பு நாக் அவுட் முறையிலும் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அதில், வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் விளையாடுவார்கள்.

பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் “ஏ” அணியில் சென்னை வருமான வரி அணி, டெல்லி இந்திய விமானப் படை அணி, கபூர்தலா ரயில் கோச் பேக்டரி அணி, கேரளா மாநில மின்சார வாரிய அணிகளும், “பி” பிரிவில் டெல்லி இந்திய ராணுவம் அணி, சென்னை இந்தியன் வங்கி அணி, லேனாவாலா இந்திய கப்பல் படை அணி மற்றும் சென்னை சுங்கம் அணி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. 

5 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ. 1,00,000 மற்றும் பி.எஸ்.ஜி. சுழற்கோப்பையும், இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 50,000 மற்றும் பி.எஸ்.ஜி. சுழற்கோப்பையும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 25,000 மற்றும் நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 15,000 வழங்கப்படும். மேலும், சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசாக ரூ. 10,000 வழங்கப்படும். இந்த போட்டிகள் வரும் 09-ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்கும். 12-ம் தேதி அரையிறுதிப் போட்டியும், 13-ம் தேதி மாலை 6 மணிக்கு இறுதிப் போட்டியும் நடைபெறும். 

9-ம் தேதி நடைபெறும் துவக்க விழா போட்டிகளை பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவரும், பி.எஸ்.ஜி. கேர் இயக்குநருமான டாக்டர். ருத்ரமூர்த்தி முன்னிலையில், கோவை ஸ்ரீனிவாசன் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஜி. ஸ்ரீனிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கிவைக்கிறார். பி.எஸ்.ஜி. காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) டாக்டர். பிரகாசன் கௌரவ விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

Newsletter