மாநில அளவிலான டென்னிஸ் போட்டி கோவையில் தொடக்கம்

கோவை : கோவையில் தொடங்கியுள்ள மாநில அளவிலான தரவரிசை இல்லாத டென்னிஸ் போட்டியில், சுமார் 150-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

கோவை : கோவையில் தொடங்கியுள்ள மாநில அளவிலான தரவரிசை இல்லாத டென்னிஸ் போட்டியில், சுமார் 150-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

ஸ்போர்ட்ஸ் இண்டியா டென்னிஸ் லீக் என்ற மாநில அளவிலான டென்னிஸ் போட்டி லெவோ ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நேற்று தொடங்கியது. இதில், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, சேலம், சென்னை, குன்னூர், ஈரோடு மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். வயதின் அடிப்படையில் ஒற்றையர், இரட்டையர் ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், 10 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் சர்வேஷும், 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ரோகித் ஹரியும் சாம்பியன் பட்டம் வென்றனர். இதேபோல, 14 மற்றும் 16 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கவுதம் மோகன் சாம்பியனானார்.

Newsletter