இன்டர் மீடியா கிரிக்கெட் தொடர் : இறுதி போட்டியில் மீடியா லெவன் - டைம்ஸ் ஆப் இந்தியா அணிகள் மோதல்

கோவை : ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் சார்பில் நடத்தப்பட்டு வரும் இன்டர் மீடியா கிரிக்கெட் தொடரில் மீடியா லெவன் - டைம்ஸ் ஆப் இந்தியா அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

கோவை : ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் சார்பில் நடத்தப்பட்டு வரும் இன்டர் மீடியா கிரிக்கெட் தொடரில் மீடியா லெவன் - டைம்ஸ் ஆப் இந்தியா அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

ஶ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் மீடியா லெவன் மற்றும் இந்து அணிகள் நேற்று மோதின. இதில், முதலில் பேட் செய்த இந்து அணி 20 ஓவர்களில் 108 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, ஆல்வின் 34 ரன்களும், நந்தகுமார் 25 ரன்களும் குவித்தனர். இதைத்தொடர்ந்து, பேட் செய்த மீடியா லெவன் அணியில் டைசன் 44 ரன்களும், சஜீத் 25எஅன்களும் ஆட்டமிழக்காமல் குவிக்க, 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எளிதில் எட்டியது. இதன்மூலம், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மீடியா லெவன் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.



இதேபோல, நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் தினமலர் அணியை (115) எதிர்த்து விளையாடிய டைம்ஸ் ஆப் இந்தியா அணி 18.3 ஓவர்களில் இலக்கை அடைந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

வரும் 10-ம் தேதி நடக்கும் இறுதி போட்டியில் மீடியா லெவன் - டைம்ஸ் ஆப் இந்தியா பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Newsletter