சர்வதேச ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க கோவை வீராங்கனை தேர்வு

கோவை : சர்வதேச ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் கோவையைச் சேர்ந்த வீராங்கனை கலந்து கொள்ள இருக்கிறார்.

கோவை : சர்வதேச ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் கோவையைச் சேர்ந்த வீராங்கனை கலந்து கொள்ள இருக்கிறார். 



இந்த ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ரஷ்யாவில் நடக்கும் சர்வதேச ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையின் சார்பில் முதல்முறையாக பங்கேற்கும் முதல் மாணவி என்ற பெருமையை ஸ்னேந்திரா பாபு (14) பெற்றுள்ளார். 9-ம் வகுப்பு பயின்று வரும் இவர், கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஸ்னூக்கர் விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ளார். இவரது தந்தை பில்லியர்ட்ஸ் வீரர் என்பதை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு ஸ்னேந்திரா இதனை விளையாடி வருகிறார். விளையாட்டின் மீதான ஆர்வத்தை அறிந்த மாணவியின் தந்தை, அவரை பயிற்சியாளர் பிரேம் பிரகாசிடம் பில்லியர்ட்ஸ் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். இதன்மூலம், ஆர்வமும், நம்பிக்கையும் அவருக்கு மேன்மேலும் அதிகரித்தது. 



டெல்லியில் நடைபெற்ற வீரர்களின் தேர்வில் முன்னிலை பெற்ற ஸ்னேந்திரா பாபு சர்வதேச அளவிலான போட்டிக்கு தேர்வாகினார். தமிழகத்தில் இருந்து ஸ்னேந்திரா உள்பட 3 பேருடன் சேர்த்து 8 வீரர், வீராங்கனைகள் இந்தியா சார்பில் பங்கேற்க இருக்கின்றனர். 

Newsletter