கோவையில் தொடங்கியது மாநில அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டி

கோவை : 45-வது மாநில அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் நேற்று தொடங்கி வைத்தார்.

கோவை : 45-வது மாநில அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் நேற்று தொடங்கி வைத்தார்.

கோவை ரைபிள் அசோசியேசன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டி பி.ஆர்.எஸ். மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடக்கும் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில், பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இருபாலருக்கும் 10 மீட்டர் ரைபிள், ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல்ஸ், 50 மீட்டர் ரைபிள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

Newsletter