மாநில அளவிலான ஸ்ரீ சக்தி கூடைப்பந்து போட்டி : வேலம்மாள் பள்ளி அணி சாம்பியன்

கோவை : பள்ளிகளுக்கு இடையிலான ஸ்ரீ சக்தி கோப்பைக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் வேலம்மாள் பள்ளி அணி மகுடத்தை சூடியது.

கோவை : பள்ளிகளுக்கு இடையிலான ஸ்ரீ சக்தி கோப்பைக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் வேலம்மாள் பள்ளி அணி மகுடத்தை சூடியது. 



ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் நடத்தப்பட்ட இந்தக் கூடைப்பந்து போட்டியில், கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, திண்டுக்கல் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 20 அணிகள் கலந்து கொண்டன. கடந்த 24-ம் தேதி முதல் நடைபெற்ற இந்தப் போட்டிகள் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன. அதில், வேலம்மாள் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, கே.கே. நாயுடு நினைவு பள்ளி, எம்.எஸ்.பி. சோலை நாடார் மற்றும் பி.எஸ்.ஜி சர்வஜனா பள்ளி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. பின்னர், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னையின் வேலம்மாள் அணி 75-26 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 



3-வது இடத்திற்கான போட்டியில் திண்டுக்கல்லின் எம்.எஸ்..ப சோலை நாடார் பள்ளி 94-75 என்ற புள்ளிகள் கணக்கில் பி.எஸ்.ஜி. சர்வஜனா பள்ளியை தோற்கடித்தது. முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகளுக்கு முறையே ரூ. 20,000, ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 என ரொக்கப்பரிசுடன் கோப்பைகளும் வழங்கப்பட்டன. 



Newsletter