கோவை கிரிக்கெட் சங்கம் சார்பில் சி.ஆர்.ஐ. கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்டில் தொடக்கம்

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் சி.ஆர்.ஐ. கோப்பைக்கான நாக் அவுட் கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்குகிறது.

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் சி.ஆர்.ஐ. கோப்பைக்கான நாக் அவுட் கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்குகிறது. 

இந்த ஆண்டுக்கான டிவிசன் கிரிக்கெட் போட்டியில் மேலும் ஒரு டிவிசனை சேர்க்க கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், அந்த டிவிசன் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெறும் விதமாக, சி.ஆர்.ஐ. கோப்பைக்கான நாக் அவுட் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. 6-வது டிவிசன் போட்டியில் 10 அணிகள் சேர்க்க முடிவு செய்துள்ள நிலையில், இந்த நாக் அவுட் போட்டியில் முன்னிலை வகிக்கும் அணிகளுக்கு, டிவிசன் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். 

நாக் அவுட் போட்டிக்கான விண்ணப்பங்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் (எஸ்.என்.ஆர்.) கல்லூரியில் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 30-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். மேலும், தொடர்புக்கு கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளர் கே. மகாலிங்கத்தை 9787740390 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter