கோவையில் பள்ளிகளுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கோவை : ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது.

கோவை : ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. 



இதில், கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, திண்டுக்கல் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 20 அணிகள் கலந்து கொண்டன. நாக் அவுட் முறையில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதல் நாளில் நடந்த 3 போட்டிகளில், கோவை ஆர்.வி.எஸ். அணியை 20-68 என்ற கணக்கில் ஈரோட்டின் சி.எஸ். அகாடமி அணி வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது. இதேபோல, கோவை சுகுணா பி.ஐ.பி. அணி 51-39 என்ற புள்ளிகள் கணக்கில் திண்டுக்கல்லின் அச்சுயுதா எம்.எச்.எஸ்.எஸ். அணியையும், பி.எஸ்.ஜி. சர்வஜனா அணி 2-1 என்ற கணக்கில் சி.எஸ். அகாடமியை தோற்கடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறின. 



இந்தத் தொடரின் இறுதிப் போட்டி நாளை நடக்கிறது. 

Newsletter