இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி நாளை தொடக்கம்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியின் (ஐஎஸ்எல்) 3-ஆவது சீசன், நாளை தொடங்குகிறது. இந்தப் போட்டி அக்டோபர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. 3-ஆவது சீசன் ஐஎஸ்எல் போட்டி மொத்தம் 79 நாள்கள் நடைபெற உள்ளது. இதில் 61 லீக் ஆட்டங்களும், அதைத் தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களும் நடைபெற உள்ளன. முதல் அரையிறுதி ஆட்டங்கள் டிசம்பர் 10 மற்றும் 11-ஆம் தேதிகளிலும், இரண்டாவது அரையிறுதி ஆட்டங்கள் 13 மற்றும் 14-ஆம் தேதிகளிலும் நடைபெற உள்ளது. இறுதி ஆட்டம் டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியின் முதல் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் மோதுகின்றன.

Newsletter