யு16 கிரிக்கெட் போட்டி: அனிருத்தின் சதத்தால் சிட்டி அணி முன்னிலை

கோவை : 16 வயதுக்குட்பட்ட ஒருங்கிணைந்த மாவட்ட கிரிக்கெட் தொடரில் அனிருத் கிருஷ்ணனின் அபார சதத்தால் சிட்டி யு16 அணி முன்னிலை பெற்றது.

கோவை : 16 வயதுக்குட்பட்ட ஒருங்கிணைந்த மாவட்ட கிரிக்கெட் தொடரில் அனிருத் கிருஷ்ணனின் அபார சதத்தால் சிட்டி யு16 அணி முன்னிலை பெற்றது. 

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் இந்தப் போட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய போட்டியில் ஒருங்கிணைந்த மாவட்ட அணியும், சிட்டி அணியும் பலப்பரீட்சை மோதின. முதலில் பேட் செய்த ஒருங்கிணைந்த மாவட்ட அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிவதேவன் (46), சந்தோஷ்குமார் (43), மாதவ் பிரசாத் (42) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 120.2 ஓவர்களில் 260 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 

இதைத் தொடர்ந்து, பேட்டிங் செய்த சிட்டி அணியின் தொடக்க வீரர்களும் அபாரமாக ஆடினர். தொடக்க வீரர் ராகுல் அய்யப்பன் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான அனிரூத் கிருஷ்ணன் சதம் விளாசி (101) அணிக்கு கைகொடுத்தார். இதனால், 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்மூலம், சிட்டி அணி 71 ரன்கள் முன்னிலை பெற்றது. 

Newsletter