குழந்தைத்‌ தொழிலாளர்‌ முறையை அகற்ற வலியுறுத்தி கோவையில் 3,000 பேர் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்

கோவை : கோவையில்‌ குழந்தைத்‌ தொழிலாளர்‌ முறையை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி மூவாயிரம்‌ பேர்‌ பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்‌ போட்டி நடைபெற்றது.

கோவை : கோவையில்‌ குழந்தைத்‌ தொழிலாளர்‌ முறையை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி மூவாயிரம்‌ பேர்‌ பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்‌ போட்டி நடைபெற்றது.

தேசிய குழந்தைத்‌ தொழிலாளர்‌ முறை அகற்றும்‌ திட்டமும்‌, பியூசன்‌ மீடியா என்டர்டெய்ன்மெண்ட்‌ நிறுவனமும்‌ இணைந்து கோவை மாவட்டத்தில்‌ குழந்தைத்‌ தொழிலாளர்‌ முறையை முற்றிலும்‌ அகற்றிட வலியுறுத்தியும், பொதுமக்களிடம்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ விதமாக மூவாயிரம்‌ பேர்‌ பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்‌ போட்டி பி.ஆர்.எஸ். மைதானத்தில் ‌கடந்த 21-ம் தேதி காலை 6 மணிக்கு நடைபெற்றது. போட்டிகளை சின்னத்திரை நட்சத்திரங்கள்‌ சஞ்சீவ்‌, அசோக்‌ ஆகியோர்‌ கொடியசைத்து துவக்கி வைத்தனர்‌. 10 கிலோ மீட்டர்‌, 5 கிலோ மீட்டர்‌, 3 கிலோ மீட்டர்‌ மற்றும்‌ ஒரு கிலோ மீட்டர்‌ என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது.

முன்னாள்‌ குழந்தைத்‌ தொழிலாளர்‌ மாணவ, மாணவிகள்‌ குழந்தைத்‌ தொழிலாளராக இருந்த போது ஏற்பட்ட பாதிப்புகள்‌, மீட்கப்பட்ட பிறகு சிறப்பு à®ªà®¯à®¿à®±à¯à®šà®¿ மையங்களில்‌ சேர்ந்து கல்வி கற்ற அனுபவங்கள்‌ மற்றும்‌ தமிழக அரசிடமிருந்து கிடைக்கப்பெற்ற உதவிகளையும்‌, தற்போது தங்களுக்குள்‌ à®à®±à¯à®ªà®Ÿà¯à®Ÿà¯à®³à¯à®³ தன்னம்பிக்கையும்‌ நினைவு கூர்ந்து அனைவரின்‌ கவனத்தையும் ஈர்த்தனர்‌. நிகழ்ச்சிகளுக்கு இடையே பொதுமக்கள்‌ குழந்தைத்‌ தொழிலாளர்கள்‌ எங்கு பணி அமர்த்தப்பட்டிருந்தாலும்‌ மத்திய அரசின்‌ www.pencil.gov.in என்ற இணையதளத்திலும்‌, மாவட்ட ஆட்சியருக்கு 0422-2305445 என்ற எண்ணிலும்‌ தொடர்பு கொண்டு புகார்‌ செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ துண்டு பிரசுரங்கள்‌ விநியோகம்‌ செய்யப்பட்டது.

தொடர்ந்து, போட்டிகளில்‌ வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்ததுடன்,‌ மீட்கப்பட்ட முன்னாள்‌ குழந்தைத்‌ தொழிலாளர்களாக இருந்து பட்டப்படிப்பு முடித்தவர்கள்‌, தற்போது பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு இளம்‌ சாதனையாளர்‌ விருதுகள்‌ வழங்கி பாராட்டினார்‌.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி பேசியதாவது :- தமிழகத்தில்‌ சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம்‌ தொழில்‌ à®¤à¯à®±à¯ˆà®¯à®¿à®²à¯à®®à¯‌, கல்வித்‌ துறையிலும்‌ சிறந்து விளங்குகிறது. ஏழ்மை மற்றும்‌ சமூக சூழ்நிலைகளைக் காரணம்‌ காட்டி குழந்தைகளை பணியில்‌ ஈடுபடுத்தக்‌ கூடாது. குழந்தைகள்‌ கல்வி கற்பதற்கு தேவையான எல்லா வசதிகளையும்‌, வாய்ப்புக்களையும்‌ தமிழக அரசு ஏற்படுத்திக்‌ கொடுத்துள்ளது பற்றி பொது à®®à®•்களிடம்‌ விழிப்புணர்வு ஏற்படுத்த இதுபோன்ற நிகழ்ச்சி அவசியம். குழந்தைத்‌ தொழிலாளர்‌ முறையை முற்றிலும்‌ அகற்ற வேண்டும்‌ என்ற கருத்தை வலியுறுத்தி தனியார்‌ நிறுவனத்தின்‌ ஒத்துழைப்புடன்‌ தேசிய குழந்தைத்‌ தொழிலாளர்‌ முறை அகற்றும்‌ திட்டமும்‌ இணைந்து 3,000‌ பேர்‌ பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்‌ போட்டியை ஏற்பாடு செய்தது பாராட்டுக்குரியது, என்றார். 

இந்நிகழ்ச்சியில்‌ தேசிய குழந்தைத்‌ தொழிலாளர்‌ முறை அகற்றும்‌ திட்டத்தின்‌ இயக்குனர்‌ டி.வி.விஜயகுமார்‌, பியூசன்‌ மீடியா எண்டர்மெய்ன்‌ மெண்ட்‌ à®¨à®¿à®°à¯à®µà®¾à®• இயக்குனர்‌ ஜீவிதா, தேசிய குழந்தைத்‌ தொழிலாளர்‌ திட்டக் கள அலுவலர்‌ நம்பிராஜன்‌ மற்றும்‌ களப்‌ பணியாளர்கள்‌ கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள்‌, தன்னார்வலர்கள்‌ உள்ளிட்டோர் பங்கேற்றனர்‌. இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின்‌ கலை நிகழ்ச்சிகளும்‌ நடைபெற்றது.

Newsletter