கோவையில் இறுதிகட்டத்தை எட்டியுள்ள 'பாரத் சூப்பர் லீக்' கபடி

கோவை : தமிழ்நாடு கபடி அமச்சூர் கழகம் சார்பில் நடைபெறும் மாநில அளவிலான கபடி போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி இன்று கோவையில் நடைபெறுகிறது.


கோவை : தமிழ்நாடு கபடி அமச்சூர் கழகம் சார்பில் நடைபெறும் மாநில அளவிலான கபடி போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி இன்று கோவையில் நடைபெறுகிறது.



பாரம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கவும், உள்ளூர் வீரர்களுக்கு சிறந்த அடித்தளம் அமைத்து கொடுக்கும் நோக்கில் ஏசியன் பெயின்ட்ஸ் சார்பில் 'பாரத் சூப்பர் லீக்' எனும் கபடி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மொத்தம் 12 நாட்கள் நடக்கும் இந்தப் போட்டியில் தமிழகத்தில் இருந்து குறிப்பிட்ட 8 மாவட்டங்களில் இருந்து 128 அணிகள் கலந்து கொண்டன. இதில், கோவை, ஈரோடு, கரூர் மற்றும் சேலம் ஆகிய 4 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. 



இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசுகையில், "புகழ்பெற்ற ஏசியன் பெயின்ட் நிறுவனம் கபடிக்கு ஆதரவு அளித்து இருப்பதன் மூலம், இளைஞர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன், சிறந்த வீரர்களையும் உருவாக்கித் தரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிறந்த விளையாட்டு, பிட்னஸ் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்திய அணிகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த போட்டித் தொடரானது, கிராமங்களில் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களுக்கு நல்ல அடித்தளமாக அமைந்துள்ளது," என்றார். 



தொடர்ந்து பேசிய தமிழ்நாடு கபடி அமச்சூர் கழகத்தின் பொதுச்செலயாளர் சஃபியுல்லா கூறுகையில், "தமிழ்நாடு கபடி அமச்சூர் கழகம் மற்றும் ஏசியன் பெயின்ட்ஸ் சார்பில் நடத்தப்படும் இந்தப் போட்டியானது, பல்வேறு வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது," என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, பாரத் சூப்பர் லீக்கின் உறுப்பினர் ராஜீவ் சவுத்ரியும் கலந்து கொண்டார். 

Newsletter