டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி : 8 விக்., வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி

திண்டுக்கல் : 4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

திண்டுக்கல் : 4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 



என்.பி.ஆர். கல்லூரியில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியின் காஞ்சி வீரன்ஸ் அணியும், லைக்கா கோவை கிங்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த காஞ்சி வீரன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது. 



அதிகபட்சமாக லோகேஸ்வர் 51 ரன்னும், சஞ்சய் யாதவ் 31 ரன்னும், பாபா அபரஜித் 29 ரன்னும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ் அணிக்கு, கேப்டன் அபினவ் முகுந்த் மற்றும் ஷாருக்கான் அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இந்த இணை 6.5 ஓவர்களில் 84 ரன்கள் குவித்திருந்த போது பிரிந்தது. ஷாருக்கான் 40 ரன்கள் எடுத்த போது, ஆர் சுரேஷ் பந்தில் போல்டானார். தொடர்ந்து, விளையாடிய கேப்டன் அபினவ் முகுந்த் 70 ரன்னும், அனிருதா சீதாராம் 22 ரன்னுடனும் கடைசி வரையில் ஆட்டமிழக்காமல் இருக்க, கோவை அணி 15.2 ஓவர்களில் இலக்கை எளிதில் எட்டி வெற்றி பெற்றது.ஆட்டநாயகனாக அபினவ் முகுந்த் தேர்வு செய்யப்பட்டார். 

இந்த வெற்றியின் மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி 2 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter