கோவையில் ரன் ஃபார் வீல்ஸ் மாரத்தான் போட்டி : 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை : சக்கர நாற்காலி கூடைப்பந்து பயிற்சிக்கு நிதி திரட்டும் வகையில் சிற்றுளி அமைப்பு மற்றும் கங்கா முதுகு தண்டுவட முறிவு மறுவாழ்வு மையம் சார்பில் ரன்ஃபார் வீல்ஸ் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.


கோவை : சக்கர நாற்காலி கூடைப்பந்து பயிற்சிக்கு நிதி திரட்டும் வகையில் சிற்றுளி அமைப்பு மற்றும் கங்கா முதுகு தண்டுவட முறிவு மறுவாழ்வு மையம் சார்பில் ரன் ஃபார் வீல்ஸ் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.



10 கி.மீ., 5 கி.மீ., 3 கி.மீ., மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஃப்ரி ரன் ஆகிய தொலைவுகளில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



இதைத்தொடர்ந்து, சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி வீரர்களின் சாகச கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தொடங்கி வைத்தார். இதனை ஏராளமானோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். 



பின்னர், மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பதக்கங்கள், டி-சர்ட்டுகள், மரக்கன்றுகள் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter